சென்னை 12 ஏப்ரல் 2022 கடுமையான கோவிட் தொற்று மற்றும் நிமோனியாவால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு சென்னை, காவேரி மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை!
கிலியன் பார் சின்ட்ரோம் என்ற சிக்கலும் இப்பெண்மணிக்கு ஏற்கனவே இருந்தது
இரண்டு முறை செயற்கை சுவாச சாதன ஆதரவிலும் மற்றும் 2 மாதங்களுக்கும் அதிகமாக தீவிர சிகிச்சைப்பிரிவிலும் இவர் இருந்திருக்கிறார்.
சென்னை, ஏப்ரல் 12, 2022: தமிழ்நாட்டில் பன்முக சிறப்புப் பிரிவுகளில் உயர்தர சிகிச்சை வழங்குவதில் முன்னணியில் உள்ள காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த ஒரு பெண்ணுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து குணமாக்கியிருப்பதை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.
இப்பெண்மணிக்கு ஒரு அரிய நரம்பியல் பாதிப்பான கிலியன் பார் சின்ட்ரோம் (Guillain-Barré Syndrome) என்பதை இன்னும் அதிக சிக்கலானதாக ஆக்குகின்ற கடுமையான கோவிட் தொற்றும் இருந்தது.
65 ஆண்டுகள் வயது பிரிவைச் சேர்ந்த இப்பெண்மணிக்கு தீவிர கோவிட் தொற்று பாதிப்பும், நிமோனியாவும் இருந்தன. அத்துடன், நோயின் தீவிரத்தை இன்னும் அதிகமாக்குகிற கிலியன் பார் சின்ட்ரோம் என்ற ஒரு மூளை நரம்பியல் கோளாறு காரணமாக தசை பலவீனமும் நீண்டகாலமாக இவருக்கு இருந்திருக்கிறது.
சென்னை, காவேரி மருத்துவமனையின் மூளை நரம்பியல் மற்றும் மூளை இயங்கியல் பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். புவனேஸ்வரி ராஜேந்திரன் இப்பெண்மணிக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றி கூறியதாவது:
“இப்பெண்மணிக்கு கிலியன் பார் சின்ட்ரோம் என்ற ஒரு அரிய மூளை-நரம்பியல் கோளாறு நீண்ட காலமாகவே இருந்திருக்கிறது.
உடலில் தசை பலவீனத்தை நீண்டகாலம் விளைவிக்கக்கூடிய இக்கோளாறில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, தவறுதலாக அதனைச் சுற்றியுள்ள நரம்பு மண்டலத்தின் பகுதி மீது தாக்குதல் தொடுப்பதே இதற்குக் காரணம்.
இந்த கோளாறுக்கு நோயெதிர்ப்புத்திறன் ஒடுக்கி மருந்துகளின் மூலம் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு இவருக்கு கோவிட் – 19 தொற்று ஏற்பட்டது.
கோவிட் தொற்றின் காரணமாக தீவிரமான நிமோனியா / நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பது இவருக்குப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
கோவிட் தொற்று ஏற்படுவதற்கு முன்பே அவரது தசைகள் சிறிதளவு பலவீனமாக இருந்ததால் அவருக்கு செய்யப்பட்டிருந்த மெக்கானிக்கல் வென்டிலேட்டர் இணைப்பை அகற்றுவது அதிக சவாலானதாக இருந்தது.
இதனால் தான் மூச்சுக்குழாய் அறுவைசிகிச்சையை (tracheostomy) ஆரம்பத்திலேயே செய்ய திட்டமிடப்பட்டது.”
சென்னை, காவேரி மருத்துவமனையின் உள்ளார்ந்த மருத்துவம் மற்றும் நீரிழிவியல் முதுநிலை மருத்துவரான டாக்டர். சிவராம் கண்ணன் இதுபற்றி மேலும் கூறியதாவது:
“இவரது உடல்நிலை மிக வேகமாக மோசமாகியது; அதனால் உடனடியாகவே செயற்கை சுவாச சாதனம் இவருக்குப் பொருத்தப்பட்டது.
Read Also அழகு போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு சமூக அக்கறை வேண்டும்! முன்னாள் மிஸ் தமிழ்நாடு டாக்டர் ஷீபா லூர்தஸ்.
கோவிட் தொற்றுக்கான மருந்துகளும், ஸ்டீராய்டுகளும் இவருக்கு வழங்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து வென்ட்டிலேட்டர் இணைப்பிலிருந்து அகற்றப்படும் அளவிற்கு இவரது நிலை படிப்படியாக முன்னேற்றம் கண்டது.
அடுத்த சில நாட்களுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் இவர் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டார்.
எனினும், இப்பெண்மணியின் சுவாசிப்பதற்கான தசைகள் மிகவும் பலவீனமாகிக்கொண்டே வந்தன.
இதன் காரணமாக இரண்டாவது முறையாக இவருக்கு வென்ட்டிலேட்டர் பொருத்துவது அவசியமாக இருந்தது.”
சென்னை, காவேரி மருத்துவமனையின் உயிர்காப்பு சிகிச்சை நிபுணரான டாக்டர். என். ஸ்ரீதர் இது பற்றி பேசுகையில்:
“இரு வெவ்வேறு நோய்களினால் இப்பெண்ணின் இரு நுரையீரல்களும், சுவாசத்தசைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், பாதிப்பிலிருந்து மீண்டெழ சாத்தியமுள்ள சிறந்த வாய்ப்பை அவருக்கு வழங்குவதற்காக மூச்சுக்குழாய் அறுவைசிகிச்சை (tracheostomy) செய்வது உகந்தது என நாங்கள் அறிவுறுத்தல் வழங்கினோம்.
(டிராக்கியோஸ்டமி என்பது, சுவாசிக்க உதவ மூச்சுக்குழாயில் ஒரு டியூபை உட்செலுத்துவதற்காக கழுத்தின் முன்புறத்தில் ஒரு துளையை உருவாக்குவது) எந்தவொரு புதிய சிக்கல்களும் வராதவாறு இரு நூரையீரல்களும் மற்றும் சுவாச மண்டல தசைகளும் குணமடைந்து மீள்வதற்கு போதுமான காலஅளைவ தரவேண்டியிருந்ததால் வென்டிலேட்டர் ஆதரவு இல்லாமலேயே அவர் தானாகவே படிப்படியாக சுவாசிக்குமாறு செய்வது ஒரு சவாலான செயல்முறையாக இருந்தது.
தனக்கு நிகழ்வதை முழுவதுமாக அறிந்திருக்கும் பட்சத்தில், இந்த காலகட்டத்தின்போது உடல் ரீதியாகவும் மற்றும் உணர்வு ரீதியாகவும் அதிக களைப்பை ஏற்படுத்தும் ஒரு சோதனைக் காலமாகவே இது இருந்தது,” என்று கூறினார்.
சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும் மற்றும் செயலாக்க இயக்குனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் இச்சிகிச்சையின் வெற்றி குறித்து பேசுகையில்,
“திருமதி. மாதவி ஒரு சமூக செயற்பாட்டாளர் மற்றும் தமிழ்நாட்டில் மிகப்பிரபலமான சுதந்திர போராட்ட வீரரான திரு. மா.பொ.சி. அவர்களின் புதல்வி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக நோக்கங்களுக்காக விடாப்பிடியாக இவர் போராடுகிறாரோ, அதைப்போலவே செயற்கை சுவாசமளிக்கும் வென்ட்டிலேட்டரிலிருந்து தான் விடுவிக்கப்பட வேண்டுமென்பதிலும் இவர் திடமான முடிவுடன் மிக உறுதியாக இருந்தார்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவுடன் முடிந்த அளவிற்கு சிறப்பான ஒத்துழைப்பை இவர் வழங்கியது பாராட்டுதலுக்குரியது.
இவரது உடல்நிலை சாதகமாக இல்லை என்று தோன்றியபோதிலும் கூட நம்பிக்கையை விடாமல், பாதிப்பிலிருந்து மீண்டெழுவதற்கு இவருக்கு சிகிச்சை ஆதரவளித்த டாக்டர். ஸ்ரீதர் மற்றும் எமது மருத்துவ மற்றும் செவிலியர்கள் குழுவை நான் மனமார பாராட்டுகிறேன்.” என்று கூறினார்.
இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்ததற்குப் பிறகு எவ்வித பெரிய அளவிலான சிக்கல்களும் இல்லாமல், இயல்புநிலைக்கு மீண்டு வந்த இந்த சமூக செயற்பாட்டாளர், மருத்துவமனையிலிருந்து புன்னகையோடு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.