பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும், திரைமறைவில் இருக்கும் மாஃபியாக்கள் குறித்தும் சமீபத்தில் கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. தவிர சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா ரனாவத்துக்கும் இடையே கடந்த இரு நாட்களாக டுவிட்டரில் கடுமையாக வாக்குவாதம் நடந்து வருகிறது.
மும்பையை மினி பாகிஸ்தான் என்று கூறியதற்கு கங்கனா மன்னிப்புக் கோர வேண்டும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.
இந்த சூழலில்தான் கங்கனா ரனாவத்துக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தனக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நடிகை கங்கனா ரனாவத் நன்றி கூறியுள்ளார்.
Kangana Ranaut
இதுகுறித்து கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்த தேசத்தில் யாருமே தேசப்பற்றை ஒடுக்க முடியாது என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது. எனக்கு பாதுகாப்பு அளித்து உத்தரவிட்டஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி..!” என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்தியஅரசு வழங்கியதில் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மகாராஷ்டிரா அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
Related