January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..?
May 24, 2020

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..?

By 0 743 Views

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான வெற்றிப் படம் சந்திரமுகி. தமிழில் நீண்ட நாட்கள் ஓடிய சாதனை படம்.

சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வெற்றிப்படமானது.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத்தகவலை சமீபத்தில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருந்தார்.

இந்தப் படத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் பிரதான கதையாக இருக்கும் என்றும், ரஜினிகாந்த் முதல் பாகத்தில் நடித்த மனோதத்துவ மருத்துவராகவே நடிப்பார் என்றும் இயக்குநர் பி.வாசு தகவல் தெரிவித்துள்ளார்.

முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்திருந்த ஜோதிகா 2-ம் பாகத்திலும் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அதைப்பற்றிய தகவல் எதுவும் எனக்குத் தெரியாது என்றும், அந்தப் படத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என்றும் சமீபத்தில் ஜோதிகா சொல்லிவிட்டார்.

இந்நிலையில் ஜோதிகாவுக்கு பதிலாக நடிகை சிம்ரனை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாவும் தகவல்கள் வருகின்றன.

சந்திரமுகி முதல் பாக சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைக்குமா பார்ட் டூ..?