December 2, 2024
  • December 2, 2024
Breaking News
May 25, 2020

பொன்மகள் வந்தாள் சீரியல் விக்கி மேக்னா திருமணமா?

By 0 736 Views

பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைம் இல் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ள பரபரப்பான சூழ்நிலையில் இந்த செய்தி சின்னத்திரையில் வெளியாகும் பொன்மகள் வந்தாள் சீரியலைப் பற்றியது.

பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து வரும் விக்கி – மேக்னா குறித்து சமீப காலமாக பல வதந்திகள் உலா வருகின்றன. மேக்னா சில நாட்களுக்கு முன்பு தான் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

டைவர்ஸ் வாங்கிய ஒரே வாரத்தில் மேக்னாவின் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், விக்கியும் மேக்னாவும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்னும் தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்த செய்திக்கு சீரியல் ஜோடி மறுப்பு தெரிவித்து வந்தனர்.

ஆனால் இந்த விஷயம் சற்று மோசமானதால் இப்போது நாயகன் விக்கி மனம் திறந்து சில விஷயங்களை பேசியுள்ளார்.

அதில், “எல்லார் வீட்டுலும் பிரச்னை உள்ளது. நானும் மேக்னாவும் நல்ல நண்பர்கள் மட்டும் தான். எனக்கு 6 வயது மகன் உள்ளார். அவரின் எதிர்காலம் கருதியாவது என்னைப் பற்றி வரும் வதந்திகளை நிறுத்தலாம். அவனுடைய எதிர்காலம் தான் எனக்கு முக்கியம். என் குடும்ப பிரச்னையை நான் பார்த்துக்கொள்கிறேன்.” இன்று பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

வதந்தி பரப்புவோர் கவனத்தில் வைத்துக் கொள்க…