நடிகர் விஷால் சென்னை சாலிகிராமத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதில் கடந்த 5 ஆண்டுகளாக திருமதி. ரம்யா என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
ரம்யா ரூபாய் 45 லட்சம் மோசடி செய்துள்ளதாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் மேனேஜரான ஹரி கிருஷ்ணன் நேற்றிரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில்…
கடந்த 2018-ம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்கு கட்டவேண்டிய டிடிஎஸ்(TDS) தொகையில் இருந்து பணம் காணாமல் போவது வாடிக்கையாகி இருந்து வந்துள்ளது.
எனவே ஊழியர்களை சோதனை செய்தபோது கணக்காளர் ரம்யா டி.டி.எஸ் தொகையிலிருந்து தனது கணவரான தியாகராஜன் என்பவரின் பர்சனல் வங்கி கணக்கிற்கும், அவர்களது உறவினர்கள், நண்பர்களின் வங்கி கணக்கிற்கும் சிறுக சிறுக ரூபாய் 45 லட்சம் பணம் அனுப்பியுள்ளார்.
இந்த மோசடி செய்த கணக்காளர் ரம்யாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதெல்லாம் சரி… இத்தனை மோசடி நடந்தும் இவ்வளவு காலம் கண்டுகொள்ளாமல் இருந்தது எப்படி என்பதும் ஒரு கேள்வியல்லவா ..?