இன்று பிற்பகல் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது விஜய் நெய்வேலியில் ஷூட்டிங்கில் இருந்தார்.
எனவே சென்னையிலிருந்து நெய்வேலி என்.எல்.சி சுரங்க பகுதிக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ‘நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்றனராம்’.
ஆனால் நுழைவாயிலிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அவர்களை சுரங்க பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. எனவே என்.எல்.சி உயர் அதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்று படப்பிடிப்பு பகுதிக்கு சென்றனர்.
அங்கு விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டவர்கள் தங்களுடன் சென்னைக்கு வருமாறு நடிகர் விஜய்யை அழைத்திருக்கிறார்கள்.
அதற்கு விஜய் ‘ஈவ்னிங் ஷீட் முடிஞ்சதும் நேரா வருகிறேனே என்று சொன்னார். அதற்கு அவர்கள் “நாங்க ஒண்ணும் ஷூட்டிங் பார்க்க வரவில்லை. விசாரணைக்காக வந்திருக்கிறோம். உடனே எங்களுடன் கிளம்புங்க” என்று சொல்ல,
நான் எனது காரில் வருகிறேன். நீங்கள் முன்னாடி போங்க” என்று விஜய் கூறியுள்ளார். அதற்கு அவர்கள், “அப்படி எல்லாம் தனித்தனியாக வர முடியாது. எங்கள் காரிலேயே நீங்களும் வாங்க” என்று சொல்லி கட்டாயப்படுத்தி அழைதது சென்றனராம்.
படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு முன்னணி நடிகரை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.