January 23, 2026
  • January 23, 2026
Breaking News
October 29, 2019

சபாஷ் விஜய் ரசிகர்கள் – சுர்ஜித் மரணம் ஃபாலோ அப்

By 0 927 Views

இரண்டரை வயது குழந்தை சுர்ஜித்தின் மரணம் நாடெங்கிலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுக்ளை மூட எல்லோருக்கும் பொறுப்பைத் தோற்றுவித்திருக்கிறது சுர்ஜித்தின் மரணப் போராட்டம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் திறந்திருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய தகவல்களைப் பெற்று வருகிறார்கள். அவற்றின் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்து வரும் அதே சமயம், தன்னார்வமாக பொதுவானவர்களும் இச்செயலில் இறங்கியிருக்கிறார்கள்.

மக்களுக்கான பொறுப்புணர்வில் முக்கிய அங்கம் வகிக்கும் நக்கீரன் இதழும் இதுபோன்ற கைவிடப்பட்ட திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க பொதுமக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பொறுப்புணர்வில் விஜய் ரசிகர்களும் இணைந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி. ஏதோ படம் பார்த்தோம், ஒரு ஹீரோவுக்கு ரசிகனாக இருந்தோம். வழக்கமான நற்பணைகளைச் செய்தோம் என்றிலாமல் இது போன்ற ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டால் அவற்றை தங்கள் செலவில் மூடிக்கொடுக்கிறோம் என்றே ட்விட்டரில் அறிவித்து அப்படி மூடிய படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து செய்வதன் மூலம் அவர்கள் பொதுமக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடிப்பதுடன், அமுதாயத்துக்குமான அரிய சேவையாக அது இருக்கும். வாழ்த்துகள் விஜய் ரசிகர்களே..! கீழே அந்த ட்வீட்…