October 17, 2025
  • October 17, 2025
Breaking News
November 5, 2020

அரசியலுக்குள் நுழைந்தார் விஜய்

By 0 807 Views

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்கவே இயலாத சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ரஜினிகாந்த் அடுத்து அரசியலுக்கு வந்து விடுவார் என்று பல ஆண்டுகள் எதிர்பார்த்த நிலையில் அவர் விலகிவிடும் சூழலே நிலவி வருகிறது. 

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்க இயலாத சூழலில் இருந்த கமல்ஹாசன் திடீரென்று அரசியல் பிரவேசம் செய்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தானே போட்டியிடவும் தயாராகி விட்டார்.

இந்நிலையில் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்க படும் பட்டியலில் முதலில் இருப்பவர் விஜய். அவரது ரசிகர்களும் அதே ஆவலில் இருக்கிறார்கள். அவர் அரசியலுக்குள் நுழையும் போது அவருக்கு ஆதரவு அமோகமாக இருக்கும் என்பது தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தின் பெயரைத் தாங்கி ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ‘ என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

இதன்மூலம் அரசியலில் நிலவும் வெற்றிடத்தை விஜய் நிரப்புவார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் விஜய் அரசியலுக்குள் நுழைந்து விட்டார் என்பதும் தெளிவாக புரிகிறது.