கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.
சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீடு நடைபெற்றது. இதில்
சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “கபடதாரி படத்தை நாங்கள் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம்.
ஆனால், கொரோனா பிரச்சினையால் அது நடக்கவில்லை. படப்பிடிப்பு முடிவடைந்து சுமார் 6 மாதங்கள் எந்த பணிகளும் நடக்கவில்லை.
ஆனால், அந்த ஆறு மாதங்களில் திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் பிரதீப் பட்டை தீட்டியதால் தான் படம் மிக நேர்த்தியாக
வந்துள்ளது. படம் விறுவிறுப்பாக நகரும். ரசிகர்கள் அனைவரும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு படம் வேகமாக
இருக்கும்.
சிபிராஜ் இந்த படத்திற்கு கச்சிதமாக இருக்கிறார். அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. நந்திதா ஸ்வேதா ரெகுலர் நாயகிகள் போல், டூயட் பாடல் கேட்காமல், கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சைமன் கே.கிங் பெரிதும் பாராட்டப்படுவார்.
நான் சினிமா இண்டஸ்ரிக்கு வந்ததில் இருந்து அவர் நிறைய உதவி செய்துள்ளார் டி.சிவா. அவருக்கு நன்றி. ஜெயப்பிரகாஷ், நாசர் என அனைவரின் வேடமும் சிறப்பாக வந்துள்ளது…” என்றார்.
’கபடதாரி’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, “என்னுடைய தயாரிப்பாளர்கள் அனைவரும் இந்த மேடையில்
இருக்கிறார்கள். என்னை நம்பி இந்த படத்தை கொடுத்த தனஞ்செயன் சாரின் நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன், என்று நம்புகிறேன்.” என்றார்.
இசையமைப்பாளர் சைமன் கே.சிங் பேசியதாவது, “இந்த படக்குழுவினருடன் எனக்கு இது இரண்டாவது படம். அதனால், நான் எனது
குடும்பத்துடன் பணியாற்றியது போலதான் பணியாற்றினேன்…”
நந்திதா ஸ்வேதா பேசுகையில், “நான் பொதுவாக நடிக்க கூடிய கதாப்பாத்திரங்களில் நடிக்க தான் விரும்புவேன். அப்படி ஒரு கதாப்பாத்திரம் தான் இந்த கதாப்பாத்திரம். சிபி ஜாலியான மனிதர். சீரியசான படமாக இருந்தாலும் சிபி இருந்தால் செட் எப்போதும் ஜாலியாக இருக்கும். எனக்கு இந்த பட வாய்ப்பு கொடுத்ததற்கு லலிதா மேடமுக்கு நன்றி.
படத்தின் இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. இசையமைப்பாளருக்கு என் வாழ்த்துகள்…” என்றார்.
சிபிராஜ் பேசியதாவது, “சிவா சார் சொன்னது போல, கபடதாரி ஜனவரி 28 ஆம் தேதி ரிலீஸாவதற்கான தைரியத்தை கொடுத்தது மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் தான். எனவே விஜய் சார், நண்பர் சிம்பு மற்றும் படக்குழுவினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கபடதாரி படம் கன்னட படத்தின் ரீமேக் தான்.இந்த படத்தை ஒடிடி பிளாட்பார்மில் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்தது. உடனே, தனஞ்செயன் சாரை தொடர்புக் கொண்டு இந்த படத்தின் உரிமையை கொடுங்கள், எங்களுடைய பேனரில் தயாரிக்கிறோம், என்றேன்.
ஆனால், அவர் நான் தயாரிக்கப் போகிறேன், என்று கூறி மறுத்துவிட்டார். உடனே, அப்படினா நானே நடித்து விடுகிறேன், சார் என்று
அவரிடம் சொன்னேன். ஆனால், அவர் வேறு ஒரு ஹீரோவிடம் பேசிக்கொண்டு இருப்பதாக என்னிடம் சொன்னார். இருந்தாலும், என்
உள்மனது இந்த படம் நமக்கு தான் வரும் என்று கூறியது. அதேபோன்று இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. எனக்கு
விஜய் ஆண்டனி சார் நிறைய உதவி செய்திருக்கிறார். இயக்குநர் பிரதீப்பை அறிமுகம் செய்து வைத்ததே அவர் தான். அனைத்து
படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்றுதான் எடுக்கிறோம். அப்படி தான் இந்த படமும் நன்றாக ஓட வேண்டும். இந்த பேண்டமிக்
நேரத்தில் படத்தை தைரியமாக தனஞ்செயன் சார் வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பேசியதாவது, “தனஞ்செயன் தமிழ் சினிமாவுக்கு
மிகவும் அவசியமான தயாரிப்பாளர். படத்தின் நாயகன் சிபியும் ரொம்ப இனிமையான மனிதர். இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது. மாஸ்டர் போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த படமும் வெற்றி பெற வேண்டும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும், பெரிய படங்கள் போல சிறிய படங்களும் வெற்றி பெற வேண்டும். இந்த படம் ஏற்கனவே வெற்றி பெற்ற படம் தான். நிச்சயம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
‘கபடதாரி’ வரும் ஜனவரி 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாகிறது.