October 28, 2025
  • October 28, 2025
Breaking News
February 22, 2020

விஜய் 65 இயக்கப் போவது சூரரைப் போற்று சுதா கோங்கரா

By 0 641 Views

விஜய்யின் 65 ஆவது படத்தை சுதா கோங்கரா இயக்கப்போவதாக உறுதிசெய்யப் பட்டு விட்டதாம். இவர் தற்போது இயக்கிய சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்துவிட்டு அதற்கான பாராட்டினை அவரிடம் விஜய் தெரிவித்தாராம்.

அதற்குப்பின் அவர் கூறிய கதையில் மனநிறைவு அடையவே தேர்ந்தெடுத்துள்ளார் என்கிறார்கள்..இதுவரை சொல்லப்பட்ட பத்து இயக்குநர்களில் சுதாதான் இப்போதைய சாய்ஸாம்.

இது உண்மையானால் விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் முதல் பெண் இயக்குனர் சுதா கோங்கரா தான். மேலும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார் என்பதும் உறுதி செய்யப்படாத தகவல்.

மேலும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இவர்கள் மூவருக்கும் இப்போதே சம்பளத்தை கொடுத்துவிட்டது என்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் திரைக்குவந்த உடனே இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் க்கு ‘சோ கால்ட்’ வழக்கமான மசாலா படங்களில் இருந்து விடுதலை…