January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நயன்தாரா சமந்தாவுடன் விஜய்சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்குகிறார்
February 14, 2020

நயன்தாரா சமந்தாவுடன் விஜய்சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்குகிறார்

By 0 1213 Views

இயக்குனர், பாடலாசிரியர், நடிகர் எல்லாவற்றுக்கும் மேல் எல்லோரும் பொறாமைப்படும் நடிகை நயன் தாராவின் காதலர் என பன்முக திறமை (!) கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் புகழ் பெற்றார்.

இவர் மூன்று வருடத்துக்கு முன்னால் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனும் படத்தை துவங்கி
னார். அந்தப் படம் டேக் ஆஃப் ஆவதற்கு முன்னால் ஞானவேல்ராஜா மூலமாக சூர்யா-வை சந்தித்தார். அப்போது இந்தியில் வந்த ‘ஸ்பெஷல் 26’ படத்தை பண்ணலாம் என்று  முடிவானது. அது 1987ம் ஆண்டு உண்மையில் நடந்த ஒரு சம்பவம். இந்திப் படத்திலிருந்து ஒரு பகுதி மட்டும் எடுத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ கொடுத்தார்

Lalithkumar

Lalithkumar

இப்போது முன்பு ஆரம்பித்த படத்தை தூசி தட்டி அதே விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தா நாயகிகளாக கமிட் ஆக ஆரம்பிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கும் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைகிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டு நாயகிகள் கொண்ட காதல் கதையாக இருப்பதால் கூடுதல் சுவாரஸ்யம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்

‘லவ்வர்ஸ் டே’-யை ஒட்டி இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.