April 27, 2024
  • April 27, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பொருத்தமில்லை – தெறிக்க விட்ட அஜித் ரசிகர்
January 16, 2019

நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பொருத்தமில்லை – தெறிக்க விட்ட அஜித் ரசிகர்

By 0 885 Views

கடந்த நாள்களாக சமூக வலை தளங்களில் நீயா, நானா என்று ரஜினி ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அடித்துக் கொள்ளாத குறையாக தங்கள் தரப்பைத் தூக்கிப் பிடித்து பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Vignesh Shivan Nayanthara

Vignesh Shivan Nayanthara

இதில் கொஞ்சம் ஓவராகப் போன அஜித் ரசிகர் ஒருவர் விஸ்வாசம் படம் பார்த்துவிட்டு வந்து “படத்துல நயன்தாரா ‘தல’க்குதான் பொருத்தமா இருக்காங்க… அவங்க ஆளுக்கு…” என்றபடி பக்கத்திலிருந்த நண்பர்களிடம், “அவன் பேர் என்னடா..?” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு “ஆங்… விக்னேஷ் சிவனுக்கு பொருத்தமேயில்லை… அவனை வந்து படம் பாக்கச் சொல்லுங்க..!” என்று அதிர வைத்திருக்கிறார்.

அந்த வீடியோவை ட்விட்டரிலும் பதிவேற்றம் செய்ய அது வைரலாகிக்கொண்டு வருகிறது. பாவம்… நயன்தாராவின் உண்மையான ஹீரோ… கீழே அந்த ட்விட்டர் வீடியோ பதிவு…