January 25, 2026
  • January 25, 2026
Breaking News
January 22, 2019

கன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்

By 0 958 Views

கதாநாயகர்களைத் தேடும் திரையுலகில் ‘எனக்கு கதாநாயகிகள் மட்டும் போதும்’ என்று ‘ஹீரோயின் ஒரியன்டட்’ படங்களையே எடுத்துக் கொண்டிருக்கிறார் ஒரு இயக்குநர்.

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலுதான் அவர். அடுத்து அவர் இயக்கவிருக்கும் படம் ‘கன்னித்தீவு’.

இந்தப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்கும் நாயகி யார் என்கிறீர்களா..? தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் வரலட்சுமிதான் இப்படத்தின் கதைநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கன்னித்தீவு என்று பெயர் வைத்துவிட்டு ஒரு கன்னிதானே இருக்கிறார் என்று மிரள வேண்டாம். இவர் போதாதென்று படத்தில் இவருடன் ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா ஜாவேரி மற்றும் சுபிக்‌ஷா என்று வகைக்கொன்றாக ஒரு கன்னியர் டீமே களமிறங்குகிறது.

அரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். சிட்டி பாபு ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார்.

கிருத்திகா புரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது.