September 15, 2025
  • September 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சொர்ணமுகி கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஏஞ்சல்
September 21, 2018

சொர்ணமுகி கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஏஞ்சல்

By 0 1832 Views

‘ஏபிசிடி, ‘நேபாளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘ஓஎஸ்டி பிலிம்ஸ்’ ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ஏஞ்சல்’.

‘தொட்டாசிணுங்கி’, ‘சொர்ணமுகி’, ‘பிரியசகி’, ‘தூண்டில்’ போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார்.

அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான ‘RX 100’ படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் ‘கயல்’ ஆனந்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

டி.இமான் இசையமைக்க ஒளிப்பதிவை மேற்கொள்கிறார் கவியரசு. ‘ரொமாண்டிக் ஹாரர்’ ஜானரில் உருவாகும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.