August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கொரோனா பிடியில் சிக்கிய சின்னத்திரை நடிகை குடும்பம்
June 2, 2020

கொரோனா பிடியில் சிக்கிய சின்னத்திரை நடிகை குடும்பம்

By 0 753 Views

இந்தியில் பிரபல சின்னத்திரை நடிகையான மொஹினா குமாரி சிங் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் அவர் மற்றும் கணவர், ஐந்து வயது மகன், மாமியார் மற்றும் சில குடும்பத்தினர் கொரோனா வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வலம் வந்தது.

இதுபற்றி தற்போது அவர் மௌனம் கலைத்தார்.  அவர் கூறும்போது “தூங்க முடியவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் குடும்பத்தினரில் முக்கியமாக இளயவர்களுக்கும், வயதானவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. நான் இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன்.

இப்பொழுது எல்லாம் நலமாக இருக்கிறது. நாங்கள் எதைப் பற்றியும் குறை கூற விரும்பவில்லை. ஏனென்றால் எங்களை விடவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்…” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

விரைவில் அவர் குடும்பம் முழு குணம் பெறட்டும்.