October 16, 2025
  • October 16, 2025
Breaking News
January 24, 2020

சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளிவருவார்

By 0 698 Views

சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

“தந்தை பெரியார் தனி ஒரு மனிதர் அல்ல, அவர் ஒரு மிகப்பெரிய இயக்கம். தந்தை பெரியார் குறித்து ரஜனிகாந்த் ஊண்மைக்குப் புறம்பாக பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடப்பதை மக்க்ள் ஆட்சியாகவே நினைக்கவில்லை. தம்ழியகத்தில் எடப்பாடியின் தலைமையில் ‘ஆட்சி’ நடக்கவில்லை – ‘கம்பெனி’தான் நடைபெற்று வருகிறது.

இங்கு பெண்கள் மீதான தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறையில் இருந்து சசிகலா விரைவில் வெளியே வருவார். சசிகலா குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்புவது ஏற்புடையதல்ல,

சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை..!”

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.