அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்தார். தொடர்ந்து நிருபர்களிடம் பேசியதிலிருந்து…
“சசிகலாவை சந்தித்துப் பேசினேன். அவர் நன்றாக இருக்கிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லையென்று வெளியான தகவல் வெறும் வதந்திதான். அதை யாரும் நம்ப வேண்டாம்.
சோபியாவின் கைது விவகாரம் தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜனின் கருத்து ஏற்கத் தகுந்த வகையில் இல்லை. பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு சகிப்புத்தன்மை வேண்டும். இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதாவின் அணுகுமுறை மிகவும் தவறாக இருக்கிறது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்துதான் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும். பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை மத்தியில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை. தமிழக எம்.பி.க்கள் ஆதரவை பெற்று கூட்டணியுடன்தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்.
தமிழகத்தில் விரைவில் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வரும். ஆயிரம் தினகரன் வந்தாலும் சமாளிப்போம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். முதலில் என்னை அவர்களால் சமாளிக்க முடிகிறதா என்று பாருங்கள்..!”