January 12, 2026
  • January 12, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விக்ரம் வேதாவைத் தொடர்ந்து விஜய் சேதுபதி படத்தைக் கைப்பற்றிய ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்
October 22, 2018

விக்ரம் வேதாவைத் தொடர்ந்து விஜய் சேதுபதி படத்தைக் கைப்பற்றிய ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்

By 0 1137 Views

ஒரு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக கடந்த பல ஆண்டுகளாக அதனை நிரூபித்தவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் . அவர் தற்போது மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கைப்பற்றியிருக்கிறார்.

ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்த ‘விக்ரம் வேதா’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சீதக்காதி’ நிச்சயம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் சென்று சேரும்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி தனது பரிசோதனை முயற்சியாக 80 வயது மேடை நாடகக் கலைஞராக தோன்றுகிறார். மேலும், டி.கே.சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்ய, ’96’ படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.