January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • கொரோனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள்
March 20, 2020

கொரோனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள்

By 0 830 Views

வைரஸால் ஏற்படும் பாதிப்புகளை விட கொரோனா பற்றிய அச்சமும் பீதியும் அந்த நோய் பற்றிய தேவையில்லாத வதந்திகளும் நம்மை பயமுறுத்துகின்றன.

கொரோனாவால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக சுகாதார அமைப்பு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது +41 798931892 என்ற எண்ணில் அஃபிஷியல் பிசினஸ் அக்கவுண்டில், வாட்ஸ் அப் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி இந்த நம்பரை பொதுமக்களிடையே பகிர்ந்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும், செல்போனை பயன்படுத்தும், கிராமம் முதல் நகர்ப்புறம் வரை பொதுமக்கள் யாராக இருந்தாலும், கொரோனா குறித்த தகவலையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறது.

இந்த நம்பருக்கு ‘hi’ என்று மெசேஜ் அனுப்பினால், குறிப்பிட்ட நேரத்தில், உங்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? என்ற கேள்வியுடன்

1. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

2. தற்காத்து கொள்வது எப்படி

3. உங்கள் கேள்விக்கான பதில்கள்

4. கொரோனா குறித்த கட்டுக்கதைகள்

5. பயண அறிவுரை

6. செய்திகள்

7. பகிர்வு

8. டொனேஷன்

என 8 ஆப்ஷன்ஸ் கொடுக்கப்படுகிறது. இதில் நாம் எந்த எண்ணைக் குறிப்பிட்டு அனுப்புகிறோமோ அதற்கான பதில் அனுப்பப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் இந்த நடவடிக்கை மக்கள் வதந்திகளிலிருந்து சற்று விடைபெற உதவுகிறது.

மேற்படி உலக சுகாதார மையத்தின் எண்ணை உங்கள் மொபைலில் பதிவு செய்து வைத்துக்கொண்டு கொரோனா பற்றிய  உண்மையான அப்டேட்களை பெற்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.