August 30, 2025
  • August 30, 2025
Breaking News
October 19, 2020

800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறவில்லை – வெளியேற்றப்பட்டார்

By 0 644 Views

இலங்கை கிரிக்கெட் வீரர் முததையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாதென பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்தும் விஜய் சேதுபதி அமைதி காத்தார்.

இந்நிலையில் இன்று முததையா முரளிதரன் ஒரு அறிக்கை அனுப்பினார்.அதில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாதென எதிர்ப்புகள வருவதால் அவர் படத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் என முரளிதரன் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகுவதாக செய்திகள் வந்தன. அவரிடம் கேட்டபோது ” நன்றி வணக்கம்…” என்றார். அதற்கு அர்த்தம் கேட்டபோது படத்திலிருந்து விலகி விட்டேன் என்பதுதான் என்றார்.

இதைப்பற்றி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தன் டிவிட்டரில் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகவில்லை – விலக்கப் பட்டார் என்றார். அந்த டுவீட் கீழே…

Thol Thiruma tweet

Thol Thiruma tweet