January 15, 2025
  • January 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வடசென்னை படங்களுக்கு போட்டியாக தயாராகும் படம் ‘தென் சென்னை’
October 30, 2024

வடசென்னை படங்களுக்கு போட்டியாக தயாராகும் படம் ‘தென் சென்னை’

By 0 100 Views

தண்ணீருக்கு அடியில் உடற்பயிற்ச்சி! ரிலீசுக்கு தயாராகும் புதிய திரில்லர் திரைப்படம் “தென் சென்னை”

தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” இப்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது…

சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும், புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் ரங்கா.

இதில்முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், ‘பொன்னியின் செல்வன்’ நாடக புகழ் இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயர்ச்சிகளில் இறங்கியுள்ளார்.

“டாடா” திரைப்படத்தில் அறிமுகமாகி புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜென் மார்டின், இந்த படதிற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார்.

சென்னையிலும், பெங்களூரூவிலும் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படதிற்க்கு ஒளிப்பதிவாளராக சரத்குமார், படத்தொகுப்பாளராக இளங்கோவன் கைகோர்த்துள்ளனர்.  

இப்படதின் போஸ்டர் லுக்ஸ், பாடல் மற்றும் டீசர் ட்ரைலர் சமீபதில் இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சிவ பத்மயன் பாடல் இசையில், நரேஷ் ஐயர் குரலில் “புது வானம் புது பூமி” இனிமையான மெலடி பாடலாகவும் , குழுவினரின் வித்யாசமான முயற்ச்சியில் மிரட்டலான டீசரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதில் தண்ணீருக்கு அடியில் சிலர் உடற்பயிற்ச்சி செய்வது போன்ற காட்சிகள் வருகின்றன. இது கடற்படை கமாண்டோக்களின் பயிற்சி உத்திகளாகும், நீருக்கடியில் பயிற்ச்சி எடுப்பது போன்று காட்சிகள் தத்ரூபமாக படமாக்கிஉள்ளனர், இது ரசிகர்களை கவறும் வகையில் இருக்கும் என படகுழுவினர் நம்பிக்கை தெறிவிக்கின்றனர்.

இப்படத்தின் பெரும்பாலான பணிகள் நிரைவடைந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*தொழில்நுட்ப வல்லுநர்கrள் விபரம்* 

இயக்குநர்: ரங்கா

தயாரிப்பாளர்: ரங்கா ஃபிலிம் கம்பனி

பின்னணி இசை : ஜென் மார்டின்

பாடல் இசை : சிவ பத்மயன் 

பாடல் : ரங்கா

பாடியவர் : நரேஷ் ஐயர்

ஒளிப்பதிவாளர்: சரத்குமார்

தொகுப்பாளர்: இளங்கோவன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : மாரிமுத்து 

வண்ணம் – சிட்டகாங் 

மக்கள் தொடர்பு – ஹேமானந்த்