November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • நீரிழிவு தின அனுசரிப்பு – அடுத்த தலைமுறைக்கான நீரிழிவு சிகிச்சை மீதான ஒரு சர்வே அறிக்கை
November 12, 2022

நீரிழிவு தின அனுசரிப்பு – அடுத்த தலைமுறைக்கான நீரிழிவு சிகிச்சை மீதான ஒரு சர்வே அறிக்கை

By 0 319 Views
  • நீரிழிவு சிகிச்சையில் நோயாளிகளின் நலனை மையமாகக் கொண்டு தொடர்ந்து சேவையாற்ற உறுதியேற்கும் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம்
  •  
  • நீரிழிவு சிகிச்சை பராமரிப்பின் மறுவடிவமைப்பு மீது இந்தியா முழுவதிலும் 2000 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களை உள்ளடக்கிய ஒரு சர்வே அறிக்கை வெளியீடு

 

இந்தியா: நவம்பர் 11 2022: நீரிழிவு தின அனுசரிப்பையொட்டி அடுத்த தலைமுறைக்கான நீரிழிவு சிகிச்சை மீதான ஒரு சர்வே அறிக்கை, டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தால் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நீரிழிவு சிகிச்சை மற்றும் அதன் மீதான ஆராய்ச்சியில் பிரபல நிபுணர்கள் பங்கேற்ற ஒரு கலந்துரையாடல் அமர்வும் நடைபெற்றது. கலந்துரையாடலுக்கான நிபுணர்கள் குழுவில் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவரும், தலைமை நீரிழிவு சிகிச்சை நிபுணருமான டாக்டர். வி. மோகன் மற்றும் இதன் நிர்வாக இயக்குனரும் மற்றும் சிறப்பு நிபுணருமான டாக்டர். ஆர்.எம். அஞ்சனா மற்றும் இதன் துணைத்தலைவர் டாக்டர். ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

“உங்களது நீரிழிவு சிகிச்சைப் பராமரிப்பிற்கு அவசியமானது என்று நீங்கள் கருதுகின்ற அதிக முக்கியமான 5 விஷயங்கள் என்ன?” என்பது மீது இந்தியாவெங்கிலும் 1800 நீரிழிவு நோயாளிகள் பங்கேற்ற ஒரு விரிவான, ஆழமான சர்வே மேற்கொள்ளப்பட்டது. நீரிழிவு பராமரிப்பில் மிக முக்கியமான, முதன்மையான அம்சமாக இருப்பது உணவுக் கட்டுப்பாடு என்று ≃50% நபர்கள் கருதுவதை இந்த சர்வே வெளிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து உடற்பயிற்சி, குறித்த காலஅளவுகளில் மருத்துவப் பரிசோதனைகள், நல்ல உடல்நல பராமரிப்பு குழுவினர் மற்றும் மனஅழுத்தம் குறைப்பு ஆகிய அம்சங்களை முக்கியமானவைகளாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். நோயாளிகளது கருத்துகளுக்கு செவிமடுப்பதும் மற்றும் அவற்றை அக்கறையோடு பரிசீலிப்பதும், நோயாளிகளின் தேவைகளுக்கேற்ப சிகிச்சை திட்டத்தை பிரத்யேகமாக வழங்குவதற்கு மருத்துவர்களுக்கு உதவுகிறது. 

டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர். வி. மோகன் இந்நிகழ்வின்போது கூறியதாவது: “நீரிழிவுக்கான சிகிச்சை மற்றும் அதன் மேலாண்மையில் குறித்த காலஅளவுகளில் தவறாது சிகிச்சை பெறும் விஷயத்தைப் பொறுத்தவரை நோயாளிகள் என்ன விரும்புகின்றனர் மற்றும் அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பது குறித்து இந்த சர்வேயின் மூலம் ஊக்கமளிக்கும் முடிவுகளையும், சிறப்பான கற்றல்களையும் நாங்கள் உண்மையிலேயே கண்டறிந்திருக்கிறோம்.”

டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் நிர்வாக இயக்குனரும், சிறப்பு மருத்துவருமான டாக்டர். ஆர்.எம். அஞ்சனா இந்நிகழ்வின்போது பேசுகையில், “எமது நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையைப் பரிந்துரைப்பதற்கு முன்பு, அவர்களது நோய் பாதிப்பு தொடர்பான பல்வேறு வகை சிக்கல்கள், முந்தைய மருத்துவ வரலாறு மற்றும் அளவுருக்களை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதால் சிகிச்சை நெறிமுறைகளும் மாறுபடுகின்றன. பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் வாழ்க்கைமுறை திருத்தங்கள், உணவுமுறை செயல்பாடுகள் மற்றும் வாழ்க்கையை மாற்றுகின்ற பிற முடிவுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை வழிகாட்டலும், ஆதரவும் மற்றும் ஆலோசனையும் நிச்சயமாகத் தேவைப்படுகின்றன. குறிப்பாக அவர்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தோடு தொடர்புடையதாக இம்முடிவுகள் இருக்கிறபோது இந்த வழிகாட்டலும், ஆதரவும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன,” என்று கூறினார்.

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் துணைத்தலைவர் டாக்டர். ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் பேசுகையில், “நீரிழிவு தின அனுசரிப்பையொட்டி பொதுமக்களுக்கு நீரிழிவு குறித்த விழிப்புணர்வை வழங்கவும் மற்றும் அவர்களை திறனதிகாரம் பெற்றவர்களாக ஆக்கவும் வேண்டுமென்ற குறிக்கோளோடு கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு சிறப்பான செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவரின் உரைகள், கலந்துரையாடல் அடிப்படையில் நோயாளிகளுக்கு கல்வி, ஆரோக்கியமான உணவுகளை தயாரிக்கும் செய்முறை விளக்கம், வில்லுப்பாட்டு, யோகா பயிலரங்குகள், சைக்கிள் ரேலி நிகழ்வுகள், வாக்கத்தான்கள், வினா விடை நிகழ்ச்சிகள் மற்றும் மெகா மருத்துவ முகாம்கள் ஆகியவை இவற்றுள் இடம்பெற்றிருந்தன,” என்று கூறினார்.

டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் குறித்து: தமிழ்நாட்டின் சென்னையில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையமானது, 1991-ம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும். இந்தியாவின் முன்னணி நீரிழிவு சிகிச்சை வழங்கல் நிறுவனமாகத் திகழும் இதுநீரிழிவு நோயாளிகளுக்கு விரிவான சேவைகளை வழங்கிவருகிறது. இந்தியாவில் 50 நீரிழிவு சிகிச்சை மையங்களைக் கொண்டு நீரிழிவு சிகிச்சையில் முழுமையான சேவைகளை இது வழங்கிவருகிறது.  இந்த சிகிச்சை மையங்களில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இம்மையங்களில் சிகிச்சைக்காக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றனர் மற்றும் இதுநாள்வரை 5.5 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ சிகிச்சைக்கான கலந்தாலோசனைகள் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன. சென்னை கோபாலபுரத்தில் உள்ள சிகிச்சை மையம் இதன் முதன்மை மருத்துவமனையாக செயல்படுகிறது. இம்மையம்முழுமையான நீரிழிவு பராமரிப்புநீரிழிவில் கண்களுக்கான சிகிச்சைநீரிழிவில் பாத பராமரிப்பு சேவைகள்  நீரிழிவு சார்ந்த இதய சிகிச்சைநீரிழிவு சார்ந்த வாய்  / பற்களுக்கான சிகிச்சைமுன்தடுப்பு பராமரிப்புஉணவுமுறை ஆலோசனை மற்றும் துல்லிய நீரிழிவு சிகிச்சை ஆகியவற்றில் சிறப்பு கவனமும்நிபுணத்துவமும் கொண்டிருக்கிறது. 

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து டிஜிட்டல் புத்தாக்க செயல்பாடுகளும் டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிகிச்சை மையத்தின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும். 

8939110000 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் அல்லது visit:  www.drmohans.com என்ற வலைதளத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் மருத்துவ ஆலோசனைக்கான சந்திப்புகளை முன்பதிவு செய்யலாம்.