October 28, 2025
  • October 28, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மீண்டும் விஜய் படத்துடன் கார்த்தியின் சுல்தான் போட்டியா..?
October 31, 2019

மீண்டும் விஜய் படத்துடன் கார்த்தியின் சுல்தான் போட்டியா..?

By 0 1125 Views

இந்த தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகிலு’டன் கார்த்தியின் ‘கைதி’ தைரியமாக மோதி வெற்றியும் பெற்றுவிட்டது. இது ஒன்றும் கார்த்திக்கு புதிதல்ல… இதேபோல் 2011ம் ஆண்டு வெளியான விஜய்யின் காவலனுடன் மோதிய கார்த்தியின் சிறுத்தை வெற்றி பெற்றது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான விஜய் 64 படம் இப்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதியும் அப்படத்தில் இணைய அத்ன் எதிர்பார்ப்பு இப்போதே கூடிக் கிடக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, ‘கைதி’யைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கார்த்தி நடித்து பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ‘சுல்தான்’ படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

சமீபத்தில் ‘சுல்தான்’ குறித்து ஒரு வீடியோ பேட்டியில் அதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சுல்தான் 2020 மத்தியில் வெளியாகும் என்று கூறியிருந்தார்.

பொங்கலுக்குள் பட்ம் ரெடியானால் ரஜினியின் ‘தர்பார்’ படத்துடன் சுல்தானை வெளியிடவிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு.

ஆனால், மேற்படி பிரபுவின் பேட்டியை வைத்து மீம் கிரியேட்டர்கள், வடிவேலுவை விஜய்யாக சித்தரித்து பிரபு சொல்வதைப் பார்த்து பம்முவது போல் ஒரு ‘மீம்’ கிரியேட் பண்ணி விட்டார்கள். 

அப்படி ‘சுல்தான்’ ‘தர்பாரு’டன் மோதினாலும் சரி, விஜய் 64-டன், மோதினாலும் சரி… அது சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்..!