March 22, 2025
  • March 22, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பரவை முனியம்மா வுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஓடி வந்து உதவிய ஹீரோ
October 31, 2019

பரவை முனியம்மா வுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஓடி வந்து உதவிய ஹீரோ

By 0 805 Views

இளம் நடிகைக்கு ஒன்று என்றால் ஓடி வந்து உதவ பலபேர் தயாராக இருக்க, பரவை முனியம்மாவுக்கு ஓடி வந்து உதவியிருக்கிறார் ஒரு ஹீரோ. அவர் அபி சரவணன்.

நடிகை அதிதிமேனனுடன் திருமண சர்ச்சைகளில் நிறைய அவர் மீது விமர்சனங்கள் வந்தாலும், அவ்வப்போது சமூக சேவைகளில் ஆர்வம் காட்டிவருகிறார் அபி சரவணன்.

Abi Saravanan Helps Paravai Muniamma

Abi Saravanan Helps Paravai Muniamma

சில தினங்களுக்கு முன் மதுரையிலிருக்கும் பரவை முனியம்மா உடல் நலமின்றி இருப்பதைக் கேள்விப்பட்டு மதுரை சென்ற அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரவை முனியம்மாவுக்கு பரிசுகள், துணி மணிகள், மருந்து மாத்திரைகள் வாங்கித் தந்தார். 

இந்நிலையில் இன்று திடீரென்று பரவை முனியம்மாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அறிந்த அவர் உடனடியாக அவரை மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கிறார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தகவல் அறிந்து சென்னை நடிகர் சங்கத்தில் இருந்து நாசர், கார்த்தி, பாக்யராஜ், ஐசரி கணேஷ், பொன்வண்ணன் ஆகியோர் அபி சரவணனிடம் பரவை முனியம்மாவின் உடல்நலம் குறித்து விசாரித்திருக்கின்றனர்.