July 1, 2025
  • July 1, 2025
Breaking News
January 14, 2019

ஸ்டன் ஆக வைத்த ஸ்டன் சிவாவின் மகன்கள்

By 0 848 Views
37 வது தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் சார்பில் சென்னை கீழ்பாக்கம் JJ ஸ்டேடியத்தில் மாநில கராத்தே சாம்பியன் போட்டி நடைபெற்றது. 
 
13 ஜனவரி, ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள் 76 KG பிரிவில் கலந்து கொண்ட  ஸ்டிவன் குமாரும், 70 KG பிரிவில் கலந்து கொண்ட கெவின் குமாரும் வெற்றி பெற்றனர். 
 
தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் மாநிலத்தலைவர் கராத்தே R.தியாகராஜன் வெற்றி பெற்ற ஸ்டிவன் குமார் மற்றும் கெவின் குமார் ஆகியோருக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்வில் ஸ்டன் சிவா, லாஸி சிவா, கனகராஜ், அல்தாப் ஆகியோர் உடனிருந்தனர்.
 
ஸ்டன்ட் மாஸ்டர் மகன்கள் தங்க மெடல் வாங்கலேன்னாதான் ஆச்சரியம்..!