July 6, 2025
  • July 6, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மன்மத ராசா புகழ் சிவசங்கர் மாஸ்டர் கொரோனாவுக்கு பலி
November 28, 2021

மன்மத ராசா புகழ் சிவசங்கர் மாஸ்டர் கொரோனாவுக்கு பலி

By 0 663 Views

இந்திய மொழிகளில் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு உள்பட 10 மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார் திரைப்பட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர்.

ஏகப்பட்ட மாநில விருதுகளைப் பெற்றுள்ள இவர் தெலுங்கில் மகதீரா படத்தில் சிறப்பான நடன இயக்கத்துக்காக தேசிய விருதையும் பெற்றவர்.

இந்நிலையில் சிவசங்கர் மற்றும் அவரது மனைவி மூத்த மகன் ஆகிய மூவரும் கொரோனா சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் AlG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் சிவசங்கர் மாஸ்டருக்கு நுரையீரலில் 75 சதவிகித தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.

அவரது இளைய மகன் அஜய்கிருஷ்னா உடனிருந்து மூவரையும் கவனித்து வந்தார். ஒரு நாளுக்கு ஒரு லட்ச ரூபாய் சிகிச்சைக்கு தேவைப்பட்டது. இதனால் அஜய் உதவி கோரியிருந்தார்.

இதனையடுத்து தனுஷ், பாலிவுட் நடிகர் சோனு சூட், நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் அவரை அழைத்து பண உதவி  அளித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை  சிவசங்கர் மாஸ்டர் காலமானார். அவருக்கு வயது 75.

மன்மத ராசா பாடலில் அதிவேக நடனம் அமைத்து இளைய தலைமுறை ரசிகர்களிடமும் புகழ் பெற்ற சிவசங்கர் பல படங்களில் நடித்தும் உள்ளார். 

அவற்றில் சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம், இன்று நேற்று நாளை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஒன்பது ரூபாய் நோட்டு, பரதேசி படங்கள் அடங்கும்.

சிவசங்கர் மறைவுக்கு இந்திய திரையுலகமே அஞ்சலி செலுத்தி வருகிறது.