October 16, 2025
  • October 16, 2025
Breaking News
May 2, 2018

சிவகார்த்திகேயன் ஞானவேல்ராஜா ராஜேஷ் கூட்டணி

By 0 1153 Views

இதுவரை ஹீரோ சிவகார்த்திகேயன், ஸ்டுடியோக்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குனர் எம்.ராஜேஷ் ஆகியோர் தங்களது பணியில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வெற்றிகரமாக வழங்கியவர்கள். தற்போது இந்த மூவரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போகிறது.

யெஸ்… ஸ்டுடியோக்ரீன் ‘நம்பர் 9’ தயாரிப்பில் தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13வது படம் ‘#SK13’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் பூஜையுடன் இன்று துவங்கியது.

இது பற்றி தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கூறும்போது, “ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் ஒரு படத்தில் இணையும்போது, அந்தப் படம் என்ன மாதிரி விளைவைத் தரும் என ஆராய வேண்டியதில்லை.

ராஜேஷ் படங்களின் கதாநாயகர்களின் கதாபாத்திர சித்தரிப்பு, ஒட்டுமொத்த குடும்பத்தினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் அமையும் என்பதோடு சிவகார்த்திகேயன் படத்தில் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை நிச்சயம் ராஜேஷ் இந்தப் படத்தில் கொடுப்பார் என நம்பலாம்..

அதேபோல் சிவகார்த்திகேயன் பொழுதுபோக்கு படங்களைக் கொடுக்கும் ஒரு நாயகனாக இருப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரும் பயனடைய வேண்டும் என்று நினைப்பவர். எனவே இந்த மாதிரி நேர்மறையான எண்ணங்களை உடைய கலைஞர்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..!” என்றார்.

மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்..!