July 29, 2026
  • July 29, 2026

Simple

கஸ்தூரி முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நவ.14 க்கு ஒத்திவைப்பு

by on November 13, 2024 0

சென்னையில் பிராமணர்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கஸ்தூரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிடுகையில், “மனுதாரர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் […]

Read More

காதலை மையமாகக் கொண்ட ஒரு என்டர்டெய்னர்தான் நேசிப்பாயா படம் – இயக்குனர் விஷ்ணுவர்தன்

by on November 9, 2024 0

நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் ‘நேசிப்பாயா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக அவரது மகளும் ஆகாஷின் மனைவியுமான சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்ய, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ’அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ […]

Read More

மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மற்றும் பிரபாஸ்

by on November 8, 2024 0

*ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் பிரபாஸ் ஆகியோர் இந்திய சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தை துவக்கி, மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்* திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். சலார் பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2 க்குப் பிறகு அடுத்ததாக பேக்-டு-பேக் படங்களில் இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வு, இதுவரையிலான திரையுலகில் ஒரு நடிகருக்கும், தயாரிப்பு […]

Read More

மன்னிப்பின் உயர்வைப் பேசும் படம் கங்குவா..! – சூர்யா

by on November 7, 2024 0

’கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது! ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது, “சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இத்தனை […]

Read More

நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நிவின் பாலி..!

by on November 6, 2024 0

அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார் நிவின்பாலி..! நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார், இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும் அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர்.  நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிவின் பாலி […]

Read More

சென்னைக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கும் ராயல் புரூனே ஏர்லைன்ஸ்

by on November 6, 2024 0

இந்தியாவிற்கும் புரூனேவிற்கும் இடையிலான உறவை இது வலுப்படுத்தும்… சென்னை: 6 நவம்பர் 2024: இந்தியாவின் சென்னை மாநகருக்கும் மற்றும் புரூனே – ன் பந்தர் செரி பேகவான் நகருக்குமிடையே தனது புதிய நேரடி விமான சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுவதை ராயல் புரூனே ஏர்லைன்ஸ் (RB) பெருமையுடன் அறிவித்திருக்கிறது. ராயல் புரூனே ஏர்லைன்ஸ் – ன் ஏர்பஸ் A320நியோ விமானம், 2024 நவம்பர் 5-ம் தேதியன்று சுமார் 22:50LT மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் முதன் முறையாக […]

Read More