வாழ்க்கை வரலாற்று படங்கள் தற்போதைய சினிமா உலகில் அதிகம் கவனத்துக்குள்ளாகும் ஜானராக உள்ளது. அந்த வகையில் தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அடல்ட் நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் “ஷகிலா”.
இந்தி மொழியில் எடுக்கப்பட்டு, ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இப்படம் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் கலந்துகொண்ட, இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நட ந்தது.
நிகழ்வில் ஷகிலா பேசியதிலிருந்து…
” என் வாழ்வை பயோபிக் எடுக்கமளவு எனக்கு தகுதியுள்ளதா, என எனக்கு தெரியாது. உயிரோடு இருககும் எனக்கு பயோபிக் எடுப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
எனது இந்த பயணத்தில் பெரும் ஆதரவளித்த நண்பர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் பெரும் நன்றி. நடிகை எஸ்தர் இப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.
எனது வாழ்வில் நான் கடந்து வந்த சம்பவங்களை எனது புத்தகத்தில் உள்ளவற்றை படக்குழுவுடன் பகிர்ந்து கொண்டேன். அதில் நடிகையாக ஆசைப்படுபவர்களுக்கு ஒரு சிறிய செய்தி இருக்கிறது, அது சரியாக படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நான் சொல்ல விரும்பும் செய்தி யும் அதுதான்.
இனி வரும் நடிகைகள் யாரும் என்னைப்போல் வாழாதீர்கள் என்பதுதான் அது.
இப்படத்தில் பங்கு கொண்டு உழைத்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றி..!”
இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படத்தில் ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி நடித்துள்ளார்கள்.