August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஒரே ஆண்டில் ஜவான் பதான் மூலம் வசூல் சாதனையை நிகழ்த்திய ஷாருக்..!
September 30, 2023

ஒரே ஆண்டில் ஜவான் பதான் மூலம் வசூல் சாதனையை நிகழ்த்திய ஷாருக்..!

By 0 438 Views

இந்தியாவின் இரண்டு மிக உயர்ந்த வசூல் சாதனைகள், இப்போது ஷாருக்கான் வசம் வந்தது!!

ஒரே ஆண்டில் ஜவான் மற்றும் பதான் மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய ஒரே நடிகர் ஷாருக்கான்.

ஜவான் அதிக வசூல் செய்த SRK இன் இரண்டாவது படம் மட்டுமல்ல, 600cr கிளப்பில் இணைந்த முதல் இந்தி படமாகவும் சாதனை செய்துள்ளது. மேலும் பல புதிய பட வெளியீடுகள் இருந்தபோதிலும், படம் தொடர்ந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது !

இன்று, ஜவான் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த ஹிந்தித் திரைப்படமாக வரலாற்று சாதனை புரிந்துள்ளது, இந்தியாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் திரைத்துறையில் மீண்டும் பல சாதனைகளை முறியடித்து, திரைத்துறையில் சாதனைகளுக்கு புதிய வரையறைகளை அமைத்திருக்கிறார்.

ஷாருக்கான் நடிப்பில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட்டின் ஜவான், வரலாறு என்ற வார்த்தைக்கு அர்த்தமாக மாறியுள்ளது. செப்டம்பர் 7, 2023 அன்று வெளியானதிலிருந்து, திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்றை மாற்றி, புதிய சாதனைகளை எழுதி வருகிறது, மேலும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகள் படைத்துள்ளது.

ஜவான் இந்தியில் 525.50 கோடிகளையும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 584.32 கோடிகளையும் வசூலித்தது, அதே நேரத்தில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் படம் 1000 க்கும் மேற்பட்ட கோடிகளை ஈட்டி அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. தற்போது மொத்தமாக இப்படத்தின் வசூல் 1043.21 கோடியை தாண்டியிருக்கிறது! இந்த மிகப்பெரிய சாதனைகள் அனைத்தும் வெறும் 22 நாட்களில் தகர்க்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது!

புதிய வெளியீடுகளால் ஜவானின் அதிரடி வசூல் கொஞ்சம் கூட பாதிக்கப்படவில்லை, மேலும் மூன்றாவது வாரத்தில் கூட ரசிகர்கள் படத்தை ரசிக்கிறார்கள் மற்றும் அதைப் பாராட்டுகிறார்கள் என்பது படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு சான்றாகும்.