ஸ்கூட், நவம்பர் 5, 2023 முதல் சென்னைக்கு தினசரி சேவைகளைத் தொடங்குகிறது…
சென்னை- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் (SIA) குறைந்த கட்டண துணை நிறுவனமான ஸ்கூட், சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே 2023 நவம்பர் 5 முதல் தினசரி விமான சேவைகளைத் தொடங்குவதாக இன்று அறிவித்தது.
இந்த நடவடிக்கை சிங்கப்பூர் வழியாக முக்கிய நகரங்களுக்கு வசதியான அணுகலை உறுதி செய்யும் அதே வேளையில் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான கட்டணம், தடையற்ற மற்றும் தனித்துவமான பயண அனுபவங்களை வழங்குவதற்கான விமான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை முக்கியப்படுத்திக் காட்டுகிறது.
இந்த விமான நிறுவனத்தின் ஏர்பஸ் A320 விமானத்தில் இந்த நேரடி விமானம் சேர்க்கப்படுவது, சென்னையின் சர்வதேச அணுகலை மேம்படுத்துவதோடு, ஆசியா-பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஸ்கூட் இன் பரந்த நெட்வொர்க்குடன் உள்நாட்டு வணிக மற்றும் சுற்றுலாப் பயணிகளை இணைக்கும்.
இந்தியா மற்றும் மேற்கு ஆசியாவிற்கான ஸ்கூட் இன் பொது மேலாளர் திரு. பிரையன் டோரே கலந்து கொண்ட ஒரு ஊடக நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோது அவர், ஒரு முன்னணி குறைந்த கட்டண விமான நிறுவனமாக ஸ்கூட் இன் இந்திய சந்தைக்கான நம்பிக்கையைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார், மேலும் எதிர்கால திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கினார்.
ஸ்கூட், சென்னை உட்பட, இந்தியாவில் அமிர்தசரஸ், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் விசாகப்பட்டினம் அடங்கிய ஆறு இடங்களுக்கு இப்போது சேவை செய்கிறது.
ஸ்கூட் நிறுவனத்தின் இந்தியா பொது மேலாளர் திரு. பிரையன் டோரே கூறுகையில், “இந்தியா எப்போதுமே ஸ்கூட்டிற்கு ஒரு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது, மேலும் சென்னையிலிருந்தும் சென்னைக்கும் தினசரி சேவைகளைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்தச் சந்தையில் அதிகரித்து வரும் பயணத் தேவைக்கு சேவை செய்வதற்கும், சிங்கப்பூருக்கு அப்பால் உள்ள மெல்போர்ன், ஹனோய், பாங்காக், சியோல் மற்றும் குவாங்சோ போன்ற ஸ்கூட்டின் விரிவான நெட்வொர்க்குடன் தமிழகத்தின் தலைநகரிலிருந்து பயணிகளை இணைப்பதற்கும் நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். வசதிக்காகத் தேடும் வணிகப் பயணியாக இருந்தாலும் சரி அல்லது தனது அடுத்த விடுமுறை இலக்கைத் தேடும் சுற்றுலாப் பயணியாக இருந்தாலும் சரி, ஸ்கூட் விரைவில் அனைத்து இந்தியப் பயணிகளையும் இணைப்பதற்கு வரவேற்க காத்திருக்கிறது.”என்றார்.
விமான கால அட்டவணைகள் பற்றிய விவரங்களை இணைப்பு A இல் காணலாம். ஸ்கூட்டைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து www.flyscoot.com/en. இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
இந்த நிகழ்ச்சி முடிவில் ஸ்கூட் விமான சேவை பற்றிய 12 கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றுக்கு சரியான விடைகள் சொன்ன விருந்தினர்களுக்கு ஸ்கூட் நிறுவனம் 50 சிங்கப்பூர் டாலர்களை பரிசாக அளித்தது..!