September 1, 2025
  • September 1, 2025
Breaking News
February 11, 2019

பரியேறும் பெருமாள் கதிரின் அடுத்த படம் ‘சத்ரு’

By 0 1005 Views

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’.

இந்தப் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய இசையமைக்கிறார் அம்ரிஷ். பாடல்களை கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் நவீன் நஞ்சுண்டானிடம் இந்த படம் பற்றிக் கேட்டோம்…

“இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த படம். விறு விறுப்பான திரைக்கதை கொண்ட படம். இந்த படத்தைப் பார்த்த மைல்ஸ்டோன் மூவிஸ் G.டில்லிபாபு சார் படத்தை ரிலீஸ் செய்கிறார்.

தரமான படங்களான வெற்றி படங்களான ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’ என பார்த்து பார்த்து தயாரிக்கும் டில்லிபாபு ‘சத்ரு’ படத்தை வெளியிடுகிறார் என்றால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். குற்றவாளிகளாக. யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலிஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது தான் திரைக்கதை..!” என்று முடித்தார்.