October 15, 2025
  • October 15, 2025
Breaking News
January 28, 2020

சிவகுமார் பாணியில் சல்மான்கான் வைரல் வீடியோ

By 0 802 Views

அனுமதி இல்லாமல் முகத்துக்கு நேரே செல்போனை நீட்டி செல்பி எடுத்தால் சிவகுமார் என்ன சல்மான் கானுக்கும் கோபம் வரும் என்பது நிரூபணமாகியுள்ளது..

அப்படி செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை இந்தி நடிகர் சல்மான் கான் தட்டி விட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ராதே’ படத்தின் படப்பிடிப்புக்காக கோவாவுக்கு அவர் வந்துள்ளார்.

விமான நிலையத்தில் சல்மான் நடந்து வந்தபோது, அவருக்கு முன்பு வந்த ரசிகர் ஒருவர் தன்னிடம் இருந்த செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். இதை கண்டு ஆத்திரமடைந்த சல்மான், பாய்ந்து சென்று போனை தட்டி பறித்தார். பின்னர் விமான நிலையத்திலிருந்து வேகமாக கோபத்துடன் வெளியேறி விட்டார்.

செல்பி எடுத்தவர், கோவா விமான நிலைய ஊழியராவார். இதுகுறித்து அவர் புகார் எதுவும் அளிக்கவில்லை. இருப்பினும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அந்த வைரல் வீடியோ கீழே…