காஞ்சிபுரத்தில் விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த விஜய்யின் அப்பாவும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், “மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியலை வியாபாரமாக செய்யாதீர்கள். அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுத்தால் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் மாறிக் கொண்டே வருகின்றது. அதனால் மக்களிடம் அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் வெற்றியடைய முடியும்…” என்றார்.
“நாட்டைக் காக்க நல்லவர்கள் ஒன்று சேரவேண்டும்…” என்று அவர் சொன்னபோது “டிராபிக் ராமசாமி, ஐஏஎஸ் சகாயம் போன்ற சமூக ஆர்வலர்கள் உடன் விஜய் இணைவாரா..?” என்ற கேள்வி எழுப்பப்பட, “அது சாத்தியமில்லை..1” என்றார்.
“குடி உரிமை சட்ட திருத்த மசோதா பற்றிக் கேட்டபோது “அது மிகவும் குழப்பமாக உள்ளது .அதை புரிந்து கொள்ள முடியவில்லை.அதை பற்றி கருத்து கூற இயலவில்லை..1” என்றார்.
திரைப்படத்துறை பற்றிய கேள்விக்கு, “கடந்த நான்கு ஐந்து வருடமாக திரைப்படத்துறை அழிவை நோக்கி மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் சரியாக செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.
அரசு அதிகாரிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் முதல் கொண்டு நடிகர்கள் சங்கம் வரை அனைத்திலும் தலையிடுகிறார்கள்…” என்றார்.