October 25, 2025
  • October 25, 2025
Breaking News
September 8, 2020

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

By 0 1058 Views
கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் நாடாக ரஷ்யா அறிவித்தது.
 
மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்.
 
எனினும் ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்கள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில்,  ஸ்புட்னிக்-v என்ற ரஷ்ய தடுப்புசி பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
இதுதொடர்பாக, ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 
“தேவையான தகுதி சோதனைகள் வெற்றி பெற்றதையடுத்து பொது பயன்பாட்டுக்கு  விடப்பட்டுள்ளது.
 
ரஷ்யாவின் பிராந்திய பகுதிகளுக்கு விரைவில் இந்த மருந்துகளின் முதல் தொகுப்பு கிடைத்துவிடும்..! ” என  தெரிவித்துள்ளது.