ரோஜா மட்டும் வீட்டில் இப்படி சமைத்து உண்கிறாரே..? என்று நீங்கள் நினைக்கத் தேவையில்லை. அவர் எம்எல்ஏ வாக இருக்கும் நகரி தொகுதியில் கோரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பாடுபட்டு வரும் ஊழியர்கள் 5 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார்.
நகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஒரு ஆண்டுக்கும் மேலாக நகரி எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகை ரோஜா அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவை ரூ.4-க்கு வழங்கி வருகிறார்.
இப்போது அவர்களுக்காக நிறுவிய உணவு கூடத்தை விரிவாக்கி, தினமும் மேலும் 5 ஆயிரம் பேருக்கு கூடுதலாக உணவு தயாரித்து ‘ரோஜா சாரிடபுள் டிரஸ்ட்’ மூலம் ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கிட முடிவு செய்து அமல்படுத்தி வருகிறார்.
என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். செல்வந்தர்கள் அனைவரும் இப்படிப்பட்ட பேரிடர் நிலையில், ஏழைகளை காக்க உதவி செய்ய வேண்டும் என ரோஜா அழைப்பு விடுத்தார்.