October 27, 2025
  • October 27, 2025
Breaking News
February 9, 2020

கை படாமல் நடிப்பது எப்படி – பாக்ஸர் நடிகை வேதனை

By 0 824 Views

கிக் பாக்ஸிங் சேம்பியன் ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிகையானார். அதிலும் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்திருந்தார்.

தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே திரைப்படம் காதலர் தினத்தன்று திரைக்கு வருகிறது.

இந்நிலையில் ரித்திகா சிங் தனது சமீபத்திய பேட்டியில், ‘தமிழில் நான் நடித்த முதல் படம் வெற்றி பெற்றாலும் அதன் பிறகு அதிக பட வாய்ப்புகள் கிடைக்காதது எனக்கு பெரிய வருத்தம் தான்.

ஒருவேளை நான் ஹிந்தி, தெலுங்கு படங்களுக்கு சென்றது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். நிறைய படங்களில் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்து களைப்படைந்து விட்டேன்.

நிஜத்தில் இப்போதும் பயிற்சி எடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் சினிமாவில் குத்துச்சண்டை போடுவது கஷ்டமாக உள்ளது. எதிராளி மீது கைபடாமல் சண்டை போடுவது கடினம். அதனால் இனி அதுபோன்ற கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்.

ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு நல்ல படவாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்’ என சொல்லி இருக்கிறார்.

அப்ப காதல் சண்டை ஓகேதானா?