கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அறிமுகமாகி வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்த டாக்டர் சேதுராமனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.
Rebirth of Doctor Sethuraman
ஒரு பக்கம் நடிகராகவும் இன்னொரு பக்கம் மருத்துவத்துறையில் தோல் நிபுணராகவும் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கொரோனா ஊரடங்கு நேரத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.
வெறும் 36 வயதில் நேர்ந்த அவரது மரணம் கோலிவுட்டில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் அவரது மனைவி உமையாள் கர்ப்பமாக இருந்தார்.
இப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது டாக்டர் சேதுராமன் மீண்டும் வந்து பிறந்திருப்பதாக அவர் குடும்பத்தினர் மகிழ்கிறார்கள்.