January 25, 2026
  • January 25, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • டிவி நடிகை மகாலட்சுமியை மணந்த முருங்கைக்காய் சிப்ஸ் தயாரிப்பாளர்
September 1, 2022

டிவி நடிகை மகாலட்சுமியை மணந்த முருங்கைக்காய் சிப்ஸ் தயாரிப்பாளர்

By 0 737 Views

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது.

திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரும் புதுமண தம்பதியரான ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கருக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

தனது திருமணம் குறித்து பேசிய ரவீந்தர் சந்திரசேகரன், மகாலட்சுமி போல் பெண் அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள் என்றும் ஆனால் மகாலட்சுமியே தனது வாழ்க்கையாக கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

ரவீந்தர் சந்திரசேகரன் தனக்கு வாழ்க்கைத் துணையாக கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய மகாலட்சுமி சங்கர், வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர், சுட்ட கதை, நளனும் நந்தினியும், முருங்கைக்காய் சிப்ஸ் உள்பட படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.