January 23, 2026
  • January 23, 2026
Breaking News
May 13, 2018

பாஜகவுடன் கூட்டணி வைக்க ரஜினி ஆலோசனை

By 0 1181 Views

ரஜினி இந்த மாதம் தொடர்ச்சியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

இன்றும் இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். அவர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாம் தொடங்க இருக்கும் புதிய கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

அத்துடன் பி.ஜே.பியுடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினி கருத்து கேட்க, “வேண்டாம். அதனால் சிறுபான்மையினரின் ஓட்டுகளை நாம் இழக்க வேண்டி வரும்…” என்று அவர்கள் ஆலோசனை சொன்னதாகத் தெரிகிறது.`மாணவர்களை உறுப்பினராக இணையுங்கள். ஆனால் களப் பணியில் ஈடுபடுத்தாதீர்கள். அவர்களின் படிப்பு வீணாக போய்விடக்கூடாது’ என்று ரஜினி அவர்களிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.

பின்னர் இளைஞர் அணி நிர்வாகிகள் ரஜினியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

கடந்த 9-ந்தேதி நடைபெற்ற காலா பட இசை வெளியீட்டு விழாவை 10 ஆயிரம் ரஜினி மக்கள் மன்றத்தினருடன் கொண்டாடிய ரஜினி, புதிய கட்சியைத் தொடங்குவதற்கான காலம் விரைவில் வரும் என்று அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.