January 23, 2026
  • January 23, 2026
Breaking News
January 15, 2020

பிளாக்கில் விற்ற துக்ளக் ரஜினி சொன்ன விளக்க வீடியோ

By 0 817 Views

துக்ளக் பத்திரிகை 50வது ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வெங்கையா நாயுடு, ரஜினிகாந்த் கலந்து கொண்டனர். அதில் ரஜினிகாந்த் பேசியதிலிருந்து…

“சோவை போலவே துக்ளக் இதழை தற்போது குருமூர்த்தி கொண்டு செல்கிறார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்பாக வெங்கையா நாயுடு இன்னும் சில ஆண்டுகள் மக்கள் சேவையில் இருந்திருக்கலாம்.

சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர்… ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி

தற்போதைய சூழலில் சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது. இந்தநிலையில் சோ போன்ற பத்திரிகையாளர் ஒருவர் அவசியம் தேவை..!

கவலைகள் நம் வாழ்வில் அன்றாடம் வரும்; அதை நிரந்தரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில் தான் இருக்கிறது.

பொதுவாக ‘முரசொலி கையில் வைத்திருந்தால் திமுக என்பார்கள்; அதேபோல துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி…’ என்பார்கள்

ஊடகங்கள் எப்போதும் பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும். பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் பொய் என்னும் தண்ணீரை கலந்துவிடக் கூடாது..!”

மேற்படி பேச்சில் துக்ளக்கை பிரபலப்படுத்தியவர் கருணாநிதி என்பதைச் சொல்லும்போது அதற்கான நிகழ்வையும் சொன்னார் ரஜினி. அந்தப் பேச்சின் வீடியோ கீழே…