August 31, 2025
  • August 31, 2025
Breaking News
October 29, 2021

ரஜினி உடல்நிலையில் இதுதான் பிரச்சினையாம்..!

By 0 594 Views

நேற்று திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.

அவரது உடல்நிலை பற்றி பல்வேறு யூக, வதந்திகளும் உலாவி வந்த நிலையில் ரஜினியின் குடும்பத்தினர் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வருவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் அவருக்கு என்ன பிரச்சினை என்பது பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. அது வருமாறு…   

ரஜினிகாந்திற்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாம்.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை, மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கும்போது நெக்ரோசிஸ்(necrosis) எனப்படும் இந்த பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுப்பட்டுள்ளதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப் படுகிறது.

ஏற்கெனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துள்ளதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உறுதிபடுத்த படாத கவல் வெளியாகியுள்ளது.

உடல்நிலை சீக்கிரமே சீராகி அண்ணாத்த வெளியீட்டுக்குள் அவர் நலம் பெற்று வந்து விட வேண்டுமென்பதுதான் அனைவரின் விருப்பமும்.