November 23, 2024
  • November 23, 2024
Breaking News
  • Home
  • கல்வி
  • சென்னையில் கால்பதிக்கும் குவாலிடெஸ்ட் குழுமம்
September 12, 2022

சென்னையில் கால்பதிக்கும் குவாலிடெஸ்ட் குழுமம்

By 0 518 Views

சென்னை: 12 செப்டம்பர் 2022: செயற்கை நுண்ணறிவுத் திறனால் (AI) முன்னெடுக்கப்படும் மென்பொருள் பரிசோதனை (software Testing) துறையில் உலகின் முன்னணி நிறுவனமான குவாலிடெஸ்ட் குழுமம், இந்தியாவில் மற்றுமொரு கிளையை தொடங்கி உள்ளது. இந்நிறுவனத்தின் செயல்உத்தி வாய்ந்த விரிவாக்கத் திட்டத்தில் ஒரு மிக முக்கிய அம்சமாக சென்னையில் புதிய டெலிவரி மையத்தின் தொடக்கம் அமைந்திருக்கிறது.

உலகளவில் வலுவான ஆதிக்கத்தையும் மற்றும் மென்பொருள் பரிசோதனையில் புதுமையான முயற்சிகளை மேற்கொள்வதில் 25 ஆண்டுகால அனுபவத்திறனையும் குவாலிடெஸ்ட் நிறுவனம் கொண்டிருக்கிறது. இந்த பிராண்டின் மிகச்சிறப்பான சேவையே உலகெங்கிலும் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவில் தற்போது நடைபெறும் இந்த அதிவேக விரிவாக்கம், அதன் வளர்ச்சி திட்டத்தில் ஒரு மிக முக்கிய அங்கமாக இந்தியா உருவாகி வருவதற்கு சாட்சியமாக திகழ்கிறது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக ஹைதராபாத்தை தளமாக கொண்டு இயங்கி வந்த மென்பொருள் பரிசோதனை நிறுவனமான ZenQ பிரைவேட் லிமிடெட் – ஐ குவாலிடெஸ்ட் குழுமம் கையகப்படுத்தியிருக்கிறது. அடுத்த தொழில்நுட்பங்களில் இதன் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கின்ற மற்றும் இதன் நிபுணத்துவத்தை ஆழமாக்குவதற்கு உதவுகின்ற துடிப்பும், ஆற்றலும் கொண்ட தலைமைத்துவ குழுவினரோடு சேர்த்து 600 + பொறியியலாளர்கள் இக்குழுமத்தில் இணைவதற்கு இந்நடவடிக்கை வழிவகுத்தது. தலைமுறை

சென்னையின் தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் அமைந்திருக்கும் மையப்பகுதியான சோழிங்கநல்லூரில் உள்ள ஃபியூச்சரா டெக் பார்க் வளாகத்தில் இடம்பெற்றிருக்கும் குவாலிடெஸ்ட் நிறுவனத்தின் இந்த புதிய கிளை நாஸ்காம் அமைப்பின் முன்னாள் தலைவரும், காக்னிசன்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அலுவலர் / துணைத் தலைவருமான திரு. லட்சுமி நாராயணன் மற்றும் குவாலிடெஸ்ட் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. அன்பு முப்பிடாதி மற்றும் அதன் இந்திய நிர்வாக இயக்குனர் திரு. ராஜேஷ் சுப்ரமணி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்குழுமத்தின் இந்திய மேலாண்மை குழுவின் உயரதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குவாலிடெஸ்ட் குழுமத்தின் தலைவர் & தலைமை செயல் அலுவலர் திரு. அன்பு கணபதி முப்பிடாதி இந்நிகழ்வின்போது கூறியதாவது: “உலகளாவிய டெலிவரி மாடலுக்கான ஒரு முக்கிய உந்துசக்தியாகவும் மற்றும் நம்பிக்கையளிக்கும் ஒரு சந்தையாகவும் குவாலிடெஸ்ட் குழுமத்திற்கு இந்தியா எப்போதும் இருந்து வருகிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய அளவிலான திறமைசாலிகளின் திறனை தீவிரமாக பயன்படுத்திக் கொள்வதை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்; அத்துட நவீன தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் வழியாக எமது வாடிக்கையாளர்களின் மென்பொருள் பரிசோதனைக்கான செயல்பாட்டில் அவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். இதற்கான நடவடிக்கையில் நவீன தொழில்நுட்பங்களை நாங்கள் சிறப்பாக பயன்படுத்துவோம்.

குவாலிடெஸ்ட் (இந்தியா) -ன் மேலாண்மை இயக்குனர் திரு. ராஜேஷ் சுப்ரமணி இது தொடர்பாக மேலும் கூறியதாவது: “கடந்த 18 மாதங்களில் இந்தியாவிலுள்ள எமது பணியாளர்களின் எண்ணிக்கையை நாங்கள் 6 மடங்கு அதிகரித்திருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ஆதரவளிக்கும் திறன்மிகு ஆற்றல் மையமாகவும் மற்றும் உத்தி வாய்ந்த மதிப்பூட்டல் அமைப்பாகவும் எமது டெலிவரி மையங்களை இன்னும் சிறப்பாக மேம்படுத்த வேண்டுமென்பது எங்களின் உலகளாவிய செயல்திட்டமாகும். அதன் அடிப்படையிலேயே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய அலுவலகம், உலகெங்கிலும் உள்ள எமது வாடிக்கையாளர்களின் மாறி வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எங்களுடைய உலகளாவிய டெலிவரி செயல்திறன்களை இன்னும் மேம்படுத்தும்; வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் உத்தியின் அடிப்படையில் இந்தியாவில் எமது செயல்பாட்டை விரிவாக்கம் செய்வதை நாங்கள் தொடர்ந்து மேற்கோள்வோம். ”

பெங்களூருவில் 600 பணியாளர்களைக் கொண்டு இயங்கி வந்த குவாலிடெஸ்ட், 18 மாதங்களுக்கும் குறைவான காலஅளவிற்குள் நொய்டா, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் கூடுதலாக அலுவலகங்களைத் தொடங்கி, 3600 பணியாளர்களைக் கொண்ட பெருநிறுவனமாக தனது செயல்பாட்டை விரிவாக்கியிருக்கிறது. சமீபத்திய விரிவாக்கங்களும் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளும், இந்தியாவில் இந்த பிராண்டில் வலுவான அடித்தளத்தை மேலும் உறுதியாக்குவதுடன், இதன் அளவையும் தரத்தையும் உயர்த்தக்கூடிய அடுத்த தலைமுறை செயல்திறன்களையும் மற்றும் திறன்மிக்க பணியாளர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்துவாகவும் அமைந்திருக்கின்றன.