November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அனைத்து மொரட்டு சிங்கிள்களுக்கும் பப்பி சமர்ப்பணம்
October 3, 2019

அனைத்து மொரட்டு சிங்கிள்களுக்கும் பப்பி சமர்ப்பணம்

By 0 745 Views

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிப்பில் வருண் முதல்முறையாக கதைநாயகன் வேடமேற்றிருக்கும் படம் ‘பப்பி. மொரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘பப்பி’ படத்தில் நாயகனாக வருண் நடிக்க கோமாளி புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இன்றைய இளைஞர்களின் உறவுச் சிக்கல்களை அடல்ட் காமெடியாக சொல்லும் படமே ‘பப்பி’. அக்டோபர் 11ம் தேதி படம் வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்…

தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பேசியது –

வேல்ஸ் ஃபிலிம்ஸ்ஸின் மூன்றாவது படம் ‘பப்பி’. கடந்த இரண்டு படங்களை போல இந்தப்படமும் பெரு வெற்றி பெறும். காலேஜ் செல்லும் இளைஞர்களுக்காகவே எடுத்திருக்கும் படம். அவர்கள் ரசிக்கும் படி இருக்கும். தரணின் இசையில் பாடல்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன..!”

இசையமைப்பாளர் தருண் பேசியது –

“இந்தப் படத்தில் நாயகன் வருண் மிக எனர்ஜியுடன் இருந்தார். ஒரு புதுமுகமாக அட்டகாசமான நடிப்பை தந்துள்ளார். இயக்குநர் மிகவும் திறமையானவர் அவருடன் வேலை செய்தது நல்ல அனுபவம். ஹிரோயின் நேரில் பயங்கர கலகலப்பானவர், ஆனால் படத்தில் ரொம்பவும் அடக்கமான ரோலில் நடித்துள்ளார். கௌதம் மேனன் சார் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அனிருத், ஆர் ஜே பாலாஜி, யுவன் சங்கர் ராஜா ஆகிய அனைவரும் பாடல் பாடியுள்ளார்கள். என்னை மதித்து பாடல்களைப் பாடியதற்கு நன்றி..!”

நாயகி சம்யுக்தா ஹெக்டே பேசியது –

கோமாளி படத்திற்கு முன்பே இந்தப்படத்தில் நடிக்க கமிட்டானேன். இந்தப்படம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. வருண் மிக நல்ல நண்பராக மாறிவிட்டார். படத்தில் எங்கள் காட்சிகளில் நீங்கள் அதைப்பார்க்கலாம்..!”

நாயகன் வருண் பேசியது –

“பப்பி படக்கதையைக் கேட்டபோதே நாம் நாயகனாக நடிக்க இதுவே சரியான கதை என்று தோன்றியது. இது என் வாழ்க்கையை, இளைஞர்களை பிரதிபலிக்கும் கதையாக இருந்தது. டிரெய்லரில் அடல்ட் மூவி மாதிரி இருக்கும் ஆனால் இது குடும்பத்துடன் பார்க்கும் க்யூட் லவ் மூவியாக இருக்கும்.

இதில் காமெடி, செண்டிமெண்ட் என எல்லாமே இருக்கிறது. இயக்குநர் மிகவும் திறமையானவர் அவர் சொல்வதில் பாதியை செய்தாலே போதும். இந்தப்படத்தில் ரசித்து ரசித்து வேலை பார்த்துள்ளேன். இந்தப்படத்தில் 6 நிமிடக் காட்சி ஒன்று உள்ளது அது கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன். கனவிலேயே வாழும் அனைத்து மொரட்டு சிங்கிள்களுக்கும் இந்தப்படம் சமர்ப்பணம்..!”

இயக்குநர் மொரட்டு சிங்கிள் பேசியது –

“காக்கா முட்டை மணிகண்டன் சாரிடம் வேலை பார்த்த போது படத்தின் திரைக்கதையை பிரிண்ட் எடுக்க எங்களிடம் காசு இல்லை. அவர் உண்டியலை உடைத்துதான் பிரிண்ட் எடுத்தோம். தான் செய்வது சரியாக இருக்க வேண்டும் என நினைப்பவர் அவர். அந்தப்படம் இன்று இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது. அவரது பெயரைக் கெடுப்பது போல் இந்தப்படம் இருக்காது.

இது A படம் கிடையாது இது U படம். தயாரிப்பாளர் ஒரு தந்தையைப் போல்தான் இருந்தார். அவரது கனவை நான் நிறைவேற்றி இருக்கிறேன். யோகிபாபுவை காக்கா முட்டை படத்திலிருந்தே தெரியும். இன்று அவர் இருக்கும் உயரம் அவருக்கு தகுதியான இடம். அவர் எனக்காக இந்தப்படம் செய்துள்ளார்..!”

Puppy Press Meet

Puppy Press Meet