September 17, 2026
  • September 17, 2026
Breaking News
July 25, 2019

ரசிகர்களால் அரசியலுக்கு இழுக்கப்படும் நடிகர்

By 0 913 Views
விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 

சற்குணம் இயக்கியிருந்த இந்தப்படத்தில் வில்லனாக இருந்தாலும் நேர்மையுடன் வந்த ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் ஏற்றிருந்த வேடம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. அவரது கதாபாத்திரம் செண்டிமெண்ட் நிறைந்த நேர்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் களவாணித்தனம் செய்து தேர்தலில் வெற்றி பெறும் விமல் மீது ரசிகர்கள் கோபப்பட்டாலும், இயல்பில் நல்லவரான துரை சுதாகர் கதாபாத்திரம் இறுதியில் பேசும் வசனத்திற்கு கைதட்டுகள் விழுந்தன..

 
Public Star Durai Sudhakar

Public Star Durai Sudhakar

அதன் பாதிப்பில் துரை சுதாகர், செல்லும் இடங்களில் எல்லாம், அவரிம் பேசும் பொது மக்கள், “நீங்க தேர்தலில் நின்றால், எங்கள் ஓட்டு உங்களுக்குதான்” என்று சொல்கிறார்களாம். சமீபத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் திரையரங்கங்களுக்கு சென்ற போது நடந்திருக்கிறது இந்த அனுபவம்.

 
தற்போது, வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்கும் ‘டேனி’ படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்து வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், படப்பிடிப்பில் இருந்தாலே அந்த இடத்தில் மக்கள் கூட்டம் கூடிவிட, அங்கே ஒரே தேர்தல் கோஷங்களாகவே எழுகின்றதாம்.
 
ஆனால், “முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் நல்ல நல்ல வேடங்களில் நடித்து நல்ல நடிகர் என்று பெயர் எடுக்க வேண்டும், என்ற எண்ணத்தில்தான் நான் சினிமாவுக்குள் வந்தேன்..!” என்கிறார் அவர்.
 
ஜெயிச்சுப் பாருங்க, அரசியல் ஆசை தானா வரும்..!