சபரிமலையில் எல்லா வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு கூறியது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தீர்ப்புக்கு பெரும்பாலும் ஆதரவு இருந்த போதிலும் தீர்ப்புக்கு எதிராகவும் ஐய்யப்ப பக்தர்கள் கருத்துகளைப் பரப்பி வருவதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று சென்னை, டெல்லி, பெங்களூருவில் நடைபெற்றது
இப்படி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ’ஐய்யப்ப நம ஜப யாத்ரா’ எனும் ஐய்யப்ப பக்தர்கள் அமைப்பு தீர்ப்புக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் பெருந்திரளான பெண்களே தீர்ப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பி இதில் கலந்து கொண்டதுதான்.
பெங்களூருவிலும் பெரும்பாலான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பதாகைகளை ஏந்தி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கம் – மகாபலிபுரம் சாலையிலும் தீர்ப்புக்கு எதிராக பெரும்பாலான பெண்கள் கையில் தீபங்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.