January 22, 2025
  • January 22, 2025
Breaking News
October 12, 2018

ஆசிய பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்கள் பெற்றுத் தந்த தமிழன்

By 0 1745 Views

இந்தோனேஷியா ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்த் குமரேசன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும், பதினொன்றாம் தேதி நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

Asian Para Games 2018

Asian Para Games 2018

ஆனந்த் குணசேகரன் தற்போது இந்திய ராணுவத்தின் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவரின் தந்தை இன்னமும் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்கள்.

இந்தியாவின் பெருமையை ஆசிய அளவில் உயர்த்திய தமிழன் ஆனந்த் குமரேசனுக்கு வந்தனங்களும், வாழ்த்துகளும்..!