July 1, 2025
  • July 1, 2025
Breaking News
March 14, 2021

கமல் கார் தாக்கப்பட்டது – தாக்கிய நபர் போலீசில் ஒப்படைப்பு

By 0 524 Views

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

காந்திரோடு பகுதியில் பரப்புரையை முடித்துக்கொண்டு கமல்ஹாசன் கிளம்பும்போது வாலிபர் ஒருவர் அவரின் காரை வழிமறித்தார். இதையடுத்து கமல்ஹாசனின் பவுன்சர்கள் அவரை அப்புறப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து மீண்டும் அந்த நபர் கமல்ஹாசனின் கார் மீது ஏறி அவர் அமர்ந்திருந்த முன்பக்க கண்ணாடியை உடைத்தார். இதில் கண்ணாடி சேதமடைந்தது. பவுன்சர்கள் மீண்டும் அந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். உடனே கமல்ஹாசன் தனது ஓட்டல் அறைக்கு கிளம்பி சென்றார்.

இதைப்பார்த்த மநீம தொண்டர்களும் பொதுமக்களும் சேர்ந்து தாக்குதல் நடத்திய நபரை பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதில் படுகாயமடைந்த அந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.