September 15, 2025
  • September 15, 2025
Breaking News
July 3, 2018

பேயைப் பாத்து போரடிச்சவங்களுக்காக இந்தப் படம்

By 0 1247 Views

‘பார்த்திபன் கனவு’ படம் வந்தாகிவிட்டது. அடுத்து என்ன..? ‘பார்த்திபன் காதல்’தானே..? அதையே தலைப்பாக்கி ‘எஸ் சினிமா கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் படம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் யோகி என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஒளிப்பதிவை ‘தங்கையா மாடசாமி’யும், இசையை ‘பில்லா’வும் கவனிக்கிறார்கள். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். கதை எழுதி இயக்குகிறார் வள்ளிமுத்து. படம் பற்றி அவரிடம் கேட்டதற்கு…

“உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக இதனை உருவாக்கி இருக்கிறேன். அறிமுக நாயகன் யோகி ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.

சமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடிப் பேய் படங்களையும், ஆக்க்ஷன் படங்களையுமே ரசிகர்கள் பார்த்து சலித்துக் கொண்டிருக்கும் சூழலில் என் ‘பார்த்திபன் காதல்’ ஒரு முழுமையான காதல் கதையாக ரசிகர்களை ஈர்க்கும்..!” என்றார்.

கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். தமிழ் சினிமாவில் கிராமத்துக் காதல்களெல்லாம் அங்கேதானே தொடங்குது..?