இன்று டெல்லியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதிலிருந்து…
கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கு வேளையிலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஜிஎஸ்டி வரம்புக்குள் எரிபொருளைக் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை குறையும்.
இதன் மூலம் எரிபொருள் விலையை லிட்டருக்கு ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும். பெட்ரோல், டீசலின் விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப விவசாயிகளின் வருமானத்தில் எந்த மாற்றமும் ஏற்றமும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை நடந்தாலும் ரொக்கப் பரிமாற்றமும் நடைப்முறையில் உள்ளது. அதைத் தடுக்க முடியாது..!”
#Chidambaram #PetrolPriceHike